/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மருத்துவ முகாம்; பழங்குடியினருக்கு பயன்
/
இலவச மருத்துவ முகாம்; பழங்குடியினருக்கு பயன்
ADDED : செப் 24, 2024 11:32 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே ஏலமன்னா பழங்குடியின கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மேங்கோரேஞ்ச் எஸ்டேட் மருத்துவமனை, 'ஆல் தி சில்ட்ரன்' இணைந்து, ஏலமன்னா பழங்குடியின கிராமத்தில் இலவச மருத்துவ முகாமினை நடத்தின.
அஜீத் வரவேற்றார். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். டாக்டர் ஷர்மிளா, மருந்தாளுனர்கள் ரமேஷ், விஷ்ணு ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பழங்குடியின மக்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மேலும், பழங்குடியின மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டது. பழங்குடியின மக்கள் பங்கேற்று பயனடைந்தனர். பிரேம்குமார் நன்றி கூறினார்.