/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
வன ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : நவ 06, 2025 11:04 PM

கூடலூர்: கூடலூரில் நடந்த, இலவச மருத்துவ முகாமில் 300 வன ஊழியர்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
கூடலூர், நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், கூடலூர் வனத்துறை மற்றும் சுல்தான்பத்தேரி மீரா சிறப்பு மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நேற்று, நடந்தது. வனச்சரகர் ரவி வரவேற்றார். முகாமை உதவி வன பாதுகாவலர் தூசர் ஸ்ரீஹரி சிந்தி துவக்கி வைத்தார்.
டாக்டர்கள் அபிநந்த், சீதல் ஆகியோர் வன ஊழியர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நோய்களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. கண் பரிசோதனை முகாமும் நடந்தது. முகாமில் 300 வன ஊழியர்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
முகாமில் வனச்சரகர்கள் சஞ்சீவ், ரவி, மருத்துவமனை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கமல் எராக்கல், சி.இ.ஓ., ஹரிகுமார், நிர்வாக அதிகாரி பெபினா ரஷிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

