ADDED : மார் 06, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தொழிற்சாலையில், கூடலுார் அரசு மருத்துவமனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் சிறப்பு முகாம் நடந்தது. கோட்ட மேலாளர் பெனோ தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.
பந்தலுார் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசுகையில்,''காசநோய் காற்றில் பரவும் தொற்று நோயாகும். 'டிரிபோ குலோசில்' என்ற கிருமி நுரையீரலில் சேர்ந்து இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு அரசு சார்பில் இலவசமாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.
