/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எடப்பள்ளி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
/
எடப்பள்ளி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஏப் 28, 2025 11:26 PM

குன்னுார், ; குன்னுார் எடப்பள்ளி கிராமத்தில், நீலகிரி சேவா கேந்திரம், நங்க படுக பேரவை, நியர் பவுண்டேஷன், பி.ஆர்.ஜி., ஆர்த்தோ, எம் ஏ.கே. மருத்துவமனை ஆகியவை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முன்னதாக, காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் ஆத்மா சாந்தி அடைய மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பி.ஆர்.ஜி. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சதீஷ்குமார், எடப்பள்ளி ஊர் தலைவர் லிங்கன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மருத்துவ முகாமில், 150க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
நீலகிரி சேவா கேந்திரம் நிர்வாகி ரஞ்சித் சண்முகம், நங்க படுக பேரவை தலைவர் சுர்ஜித் குமார் மற்றும் எடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்தனர்.

