ADDED : ஆக 03, 2025 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை சார்பில், குன்னுாரில் இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை சார்பில், குன்னுார் சந்திரா காலனி ஆர்.கே., டிரஸ்ட் பயிற்சி மையத்தில் இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், முதிர் கன்னிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு புதிய வாழ்வுக்கான, 2 மாத இந்த திறன் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்த பிறகு, அரசு சார்பாக உதவித்தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான உரிய சான்றிதழ்கள், ஆதார், ரேஷன், வங்கி புத்தக ஆதாரங்களுடன் விண்ணப்பித்து பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

