தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நெல்லியாம்பதியில் இலவச காசநோய் கண்டறியும் முகாம்

நெல்லியாம்பதியில் இலவச காசநோய் கண்டறியும் முகாம்

நெல்லியாம்பதியில் இலவச காசநோய் கண்டறியும் முகாம்


UPDATED : நவ 20, 2026 06:08 PM

ADDED : நவ 20, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 06:08 PM ADDED : நவ 20, 2026 06:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலைப்பகுதியான நெல்லியாம்பதியில், இலவச காசநோய் கண்டறியும் எக்ஸ்-ரே பரிசோதனை முகாம் நடந்தது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆரம்ப நிலையிலேயே நோயாளிகளை கண்டறிய இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட மருத்துவ அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார நிலையம், கிராம ஊராட்சி மற்றும் ஆலத்தூர் காசநோய் பிரிவு ஆகியவை இணைந்து முகாமினை நடத்தின.

நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை, ஊராட்சித் தலைவர் மாயாண்டி துவக்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லட்சுமிபிரியா தலைமை வகித்தார். உலக சுகாதார நிறுவன ஆலோசகர் டாக்டர் அபர்ணா பேசினார்.

'காசநோய் இல்லாத கேரளா மற்றும் பாரதம்' என்ற இலக்கை எட்டுவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட காசநோய் அதிகாரி டாக்டர் ஸ்ரீஜா விளக்கமளித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, மாவட்டத்திலேயே முதலாவதாக 'காசநோய் இல்லாத ஊராட்சி' என்ற பெருமையை நெல்லியாம்பதி தக்க வைத்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து நிலைநிறுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜாய்சன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us