/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அப்பர் பஜார் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
/
ஊட்டி அப்பர் பஜார் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
ஊட்டி அப்பர் பஜார் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
ஊட்டி அப்பர் பஜார் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 24, 2024 10:46 PM

ஊட்டி; ஊட்டி அப்பர் பஜார் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
ஊட்டியில் முக்கிய சாலைகள் மேம்படுத்தப்படாததால் சாலைகள் அனைத்தும் குறுகலாக உள்ளது. அதே சமயத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊட்டி நகரை பொறுத்தவரை சாலையை அகலப்படுத்தினாலும் இரு புறம் வாகனங்களை நிறுத்தி விதிமீறல் செயல்களில் ஈடுபடுவதை வாகன ஓட்டிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
போலீசார் 'நோ பார்க்கிங் போர்டு' வைத்தாலும் அங்கேயும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அபராதம் ஒருபுறம் விதித்தாலும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, ஊட்டி அப்பர் பஜார் சாலையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இச்சாலையில், இரு புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'போலீசார் ஆய்வு மேற்கொண்டு இருப்புறம் நிறுத்தி விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும்,' என்றனர்.
டவுன் டி.எஸ்.பி., நவீன் குமார் கூறுகையில், ''ஊட்டி நகரில் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். குறிப்பிட்ட முக்கிய சாலைகளில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய தீர்வு காணப்படும்,''என்றார்.

