/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கம்பளி பூச்சிகளின் கட்டுப்பாட்டில் பழ மரங்கள்; இலைகள் உதிர்வதால் பாதிப்பு

ADDED : அக் 08, 2024 11:19 PM

பந்தலுார் : பந்தலுார் பகுதி தோட்டங்களில் காணப்படும் பழ மரங்கள் கம்பளி பூச்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளதுடன், அதிகளவிலான சிறு விவசாயிகளும் உள்ளனர். சிறு விவசாயிகளின் தோட்டங்களில் தேயிலை காபி விவசாயம் மட்டுமின்றி பல்வேறு வகையான பழ மரங்களையும் வளர்த்து வருகின்றனர்.
அதில், ஆரஞ்சு, எலுமிச்சை, பட்டர்புரூட், கொய்யா உள்ளிட்ட பழ மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த மரங்களில் சமீப காலமாக கம்பளி பூச்சிகள் கூடு அமைத்து மரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
அவற்றில் இலைகள் உதிர்ந்து, மரங்கள் காய்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மேற்கொண்டுள்ள ஊடுபயிர் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் அருகே உள்ள குடியிருப்புகளில் கம்பளி பூச்சிகள் புகுந்து வருவதால், மக்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தோட்டக்கலை துறையினர் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.