/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊரெல்லாம் குப்பை; நெலாக்கோட்டை ஊராட்சிக்கு அக்கறையில்லை
/
ஊரெல்லாம் குப்பை; நெலாக்கோட்டை ஊராட்சிக்கு அக்கறையில்லை
ஊரெல்லாம் குப்பை; நெலாக்கோட்டை ஊராட்சிக்கு அக்கறையில்லை
ஊரெல்லாம் குப்பை; நெலாக்கோட்டை ஊராட்சிக்கு அக்கறையில்லை
ADDED : நவ 03, 2025 11:28 PM

பந்தலூர்: நெலாக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் குப்பை கொட்ட இடம் இல்லாததால் குடியிருப்புகள், சாலை ஓரங்களில் கொட்டி எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நெலாக்கோட்டை ஊராட்சி, 131 குக்கிராமங்கள், ஆறு நகர் பகுதிகள் என, 30-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையினையும் கொண்ட ஊராட்சியாக உள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கொட்ட போதிய இட வசதியில்லை. நெலாக்கோட்டை பஜார் பகுதியை ஒட்டிய, தனியார் வனப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் வன விலங்குகள், குப்பை கழிவுகளை உட்கொள்வதுடன், சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் வனத்துறை சார்பில், இங்கு கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதையும் மீறி நெலாக்கோட்டை பஜார், பிதர்காடு பஜார், கைவட்டா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளில், கொட்டப்பட்டு தினசரி எரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவதுடன், கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'சாலை ஓரங்கள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி குப்பை கழிவுகளை கொட்டுவதால், இவற்றை உட்கொள்ள வரும் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையும் தொடர்கிறது. கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்

