/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
/
உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
உபதலை வார்டுகளில் தேங்கிய குப்பை; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
ADDED : டிச 20, 2024 08:03 PM
குன்னுார்; குன்னுார் உபதலை அருகே பல நாட்களாக அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டு பகுதிகளில் குப்பை அகற்றாமல் பல நாட்களாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது.
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட நிகழ்ச்சியில், இப்பகுதியை காண்பிக்காமல், மாற்று வழியாக கலெக்டரை அதிகாரிகள் அழைத்து சென்று விட்டனர். இதனால், அதிருப்தியான மக்கள், இங்குள்ள பிரச்னைகள் குறித்து கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினர்.
மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் பல நாட்களாக குப்பை அகற்றப்படவில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியுள்ள கண்டுகொள்ள வில்லை. இதனால், கலெக்டருக்கு புகார் மனு அனுப்பட்டுள்ளது,' என்றனர்.