/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூண்டு ஏலத்தில் விலை வீழ்ச்சி: அதிகபட்சம் கிலோ ரூ.70
/
பூண்டு ஏலத்தில் விலை வீழ்ச்சி: அதிகபட்சம் கிலோ ரூ.70
பூண்டு ஏலத்தில் விலை வீழ்ச்சி: அதிகபட்சம் கிலோ ரூ.70
பூண்டு ஏலத்தில் விலை வீழ்ச்சி: அதிகபட்சம் கிலோ ரூ.70
ADDED : செப் 28, 2025 10:08 PM
குன்னுார், ; குன்னுாரில் நடந்த பூண்டு ஏலம் போன்றே, மேட்டுப்பாளையம் ஏலத்திலும் அதே விலை தொடர்ந்தது.
குன்னுார் எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏலம் விடப்படும் நிலையில், ஏலத்தில், குறைந்தபட்சமாக, 20 முதல், அதிகபட்சமாக ஒரு கிலோ, 70 ரூபாய் வரை ஏலம் போனது.
கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளில் நடந்த ஏலத்திலும், அதிகபட்சமாக கிலோ, 70 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரே வாரத்தில் ஏற்பட்ட, 60 சதவீத விலை வீழ்ச்சி விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 'வட மாநிலங்களில் மழை காரணமாக, விதைக்கு பூண்டு வாங்கும் வர்த்தகர்கள் ஆர்வம் காட்டவில்லை,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.