/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புற்று நோயாளிகளுக்கு தலை முடி தானமாக வழங்கும் சிறுமியர்
/
புற்று நோயாளிகளுக்கு தலை முடி தானமாக வழங்கும் சிறுமியர்
புற்று நோயாளிகளுக்கு தலை முடி தானமாக வழங்கும் சிறுமியர்
புற்று நோயாளிகளுக்கு தலை முடி தானமாக வழங்கும் சிறுமியர்
ADDED : டிச 03, 2025 06:17 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியை சேர்ந்த இரு சிறுமியர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் தலை முடிகளை தானமாக வழங்கி வருகின்றனர்.
பந்லுார் அருகே, புஞ்சைவயல் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஸ்டார்லின் மகள் அருணாழினி-,7, இவர் உப்பட்டி எம்.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறார். இதே பள்ளியில் ஆசிரியரின் சகோதரர் சந்தோஷ் என்பவரின் மகள் அருழினி,-6, முதல் வகுப்பு படித்து வருகிறார்.
இருவரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும், நோயாளிகளுக்கு தங்களின் தலை முடியை தொடர்ச்சியாக தானமாக வழங்கி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த, 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளையின் நிர்வாகி சிந்து, தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் பொது சேவை மையத்தின் செயலாளர் செல்வநாயகம் ஆகியோரிடம், தங்கள் முடியை வழங்கினர்.
செல்வநாயகம் கூறுகையில், ''இவர்களிடம் பெறப்பட்ட தலைமுடியை, சென்னையில் உள்ள 'செரியன் பவுண்டேஷன்' நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, நோயாளிகளுக்கு 'விக்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் '' என்றார். சிறுமியருக்கு அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

