/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு பாதிப்பு
/
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு பாதிப்பு
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு பாதிப்பு
சாலையில் உலா வரும் ஆடுகள் போக்குவரத்துக்கு பாதிப்பு
ADDED : ஜூலை 18, 2025 09:02 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பஜார் சாலையில், நாள்தோறும் ஆடுகள் உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
கோத்தகிரி- ஊட்டி இடையே, கட்டபெட்டு பஜார் பகுதி அமைந்துள்ளது. கக்குச்சி, நடுஹட்டி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளில் எல்லையாக அமைந்துள்ளது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தனியார் கிளினிக்குகள், தபால் அலுவலகம் மற்றும் கிளினிக்குகள் அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தவிர, ஊட்டி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் வழியாக சென்று வருகின்றன. மேலும், பள்ளிகள் பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்களும் இயக்கப்படுகிறது. இதனால், பஜார் பகுதி, போக்குவரத்தில் இருந்து காணப்படுகிறது. சமீபகாலமாக, சாலையில், 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உலா வருவது தொடர்கிறது. பெரும்பாலான நேரங்களில் அவை, சாலையில் படுத்து விடுவதால், தனியார் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், கூட்டமாக வரும் ஆடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.