ADDED : செப் 24, 2026 12:42 PM

குன்னுார்: குன்னுார் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 133-வது ஆண்டு மாநாடு, 2 நாட்கள் நடந்தது.
அதில், 21-வது கோல்டன் லீப் இந்தியா தேயிலை விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக இணை செயலர் அமித் குமார், மத்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார், காபி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி குமார ராவ், உபாசி தலைவர் அஜய் திப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 4 சிறப்பு தேயிலைகள் உட்பட, 44 பிரிவுகளில் சிறந்த தரம் வாய்ந்த தேயிலைகளை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
‘கிளன்டேல் எஸ்டேட், கண்ணவரை டீ இண்டஸ்ட்ரி, லாக்ஹார்ட் எஸ்டேட், கோடநாடு கிரீன் டீ எஸ்டேட், கூமன்கான் எஸ்டேட், சசெக்ஸ் டீ எஸ்டேட்,’ ஆகியவை, தலா 3 விருதுகளைபெற்றன. மேலும், கோடநாடு, வெல்பேக், கரோலின், புள்ளிக்கானம் எஸ்டேட்கள், ஆனைமலை, முருகள்ளி, மயூரா, லட்சுமி, வென்னியார் தொழிற்சாலைகள் தலா 2 விருதுகள் பெற்றன. ஆனைமுடி, பரளை, களார், வல்லார்டி, மூங்கலார் டீ சுண்டாலே, அரப்பேட்டா, ஐயர்பாடி, எல்லப்பட்டி, ஹாவுகல் எஸ்டேட் தொழிற்சாலைகள் தலா ஒரு விருதை பெற்றன.
