sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்

/

புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்

புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்

புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்


ADDED : பிப் 07, 2024 11:16 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தடுப்பணையை, 'கவுசிகா நீர் கரங்கள் புதுப்பாளையம் தடுப்பணை பாதுகாப்பு அமைப்பு' சார்பில், சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம், சி.ஆர்.பி.எப்., பூச்சியூர், ராவுத்துக் கொல்லனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர், பல்வேறு குடியிருப்புகள் வழியாக புதுப்பாளையம் தடுப்பணையை வந்தடைகிறது.

தடுப்பணையில் தேங்கும் நீரால், மணியகாரம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, ராக்கிபாளையம், வெற்றிலை காளிபாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் பெருகியது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழை நீரோடு, இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் கலந்தன. இதனால், புதுப்பாளையம் தடுப்பணை நீர் மாசடைந்து, குப்பை கூளமாக மாறி, தடுப்பணை முழுவதும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. புதுப்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்புற சூழல் பாதித்து, நிலத்தடி நீரும் கெட்டுப் போகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கவுசிகா நீர் கரங்கள், புதுப்பாளையம் தடுப்பணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு புதுப்பாளையம் தடுப்பணை முன்புறமுள்ள குப்பைகளை அகற்றி, சுத்தப்படுத்தி, மரக்கன்றுகள் நட்டன.

தடுப்பணையிலிருந்து ராக்கிபாளையம் செல்லும் பாதையில், கரையோர குப்பைகளையும், தேவையற்ற மரம், செடி, கொடிகளையும், மண் அள்ளும் இயந்திரம் வாயிலாக சுத்தப்படுத்தியது. எஸ்.என்.எஸ்., கே.ஜி., பி.பி.ஜி., கல்லூரி மாணவ, மாணவியர், பூமி அமைப்பினர், இன்ட்ராக்ட் அமைப்பினர், காவல் துறை அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பூமி அமைப்புடன் இணைந்து விதைப்பந்து தயாரிக்கப்பட்டது. தற்போது, புதுப்பாளையத்தில் உள்ள தடுப்பணையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை, நல்ல நீராக்கி கரைகளை பலப்படுத்தி, தடுப்பணையை சீரமைக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.

'பயோ என்சைம்' திட்டம்

இது குறித்து புதுப்பாளையம் தடுப்பணை பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில்,' முதல் கட்டமாக தடுப்பனையின் மேற்கு கரை பகுதியில் உள்ள புதர்களை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. படிப்படியாக தடுப்பணையின் அனைத்து பகுதிகளும் செப்பனிடப்படும். தற்போதைய சூழ்நிலையில், தடுப்பணைக்கு நல்லநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க முடியாது என்பதால், கழிவு நீரை 'பயோ என்சைம்' திட்டம் வாயிலாக சுத்தம் செய்து, இடிகரை வரை நீர்வழிப் பாதையில் செலுத்தி, கவுசிகா நதியில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக புதுப்பாளையம் தடுப்பணையில் தேங்கியுள்ள, திட வடிவிலான கழிவு பொருட்களை தடுப்பணையில் படகு வாயிலாக பயணித்து, அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், சமுதாய பங்களிப்பு நிதியை வழங்க முன் வந்துள்ளன. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நீர்வழி பாதைகள் சுத்தம் செய்யப்படும்' என்றனர்.








      Dinamalar
      Follow us