/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குட்ஷெப்பர்ட் பள்ளி 48வது நிறுவனர் தின விழா
/
குட்ஷெப்பர்ட் பள்ளி 48வது நிறுவனர் தின விழா
ADDED : அக் 29, 2024 08:51 PM

ஊட்டி: ஊட்டி எம். பாலாடாவில் உள்ள குட்ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியில், 48 வது நிறுவனர் தினம் நிகழ்ச்சி நடந்தது.
அதில், 'இண்டியா டெக் ஆர்க்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் கைலாசம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், குட்ஷெப்பர்ட் சர்வதேச பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு, பேண்ட் கண்காட்சி, டிரம்ஸ் அழைப்பு, ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மலையேறும் திறன்களை வெளிப்படுத்துதல், குதிரையேற்றம் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று மாணவர்களுக்கு ரஞ்சனிரமேஷ் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இணை நிறுவனர் எல்சம்மா தாமஸ், தலைவர் ஜேக்கப் தாமஸ், துணை தலைவர் சாரா ஜேக்கப், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.