நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மங்களா பாக்கு ராசி, ஒரு கிலோ, 360ல் இருந்து, 380 ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டு அதே மங்களா பாக்கு ராசி விலை குறைந்து, 300 லிருந்து, 310 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
மேட்டுப்பாளையம் ரகம் பாக்கு ராசி, கடந்தாண்டு, ஒரு கிலோ, 360 லிருந்து, 370 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு, 310 லிருந்து, 320 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு பச்சை பாக்கு (ஹேப்பி) ஒரு கிலோ, 400 இருந்து, 460 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது 410 லிருந்து, 420 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

