/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் ஆங்கிலத்தில் மட்டும் அரசு அலுவலக பெயர் பலகை
/
கூடலுாரில் ஆங்கிலத்தில் மட்டும் அரசு அலுவலக பெயர் பலகை
கூடலுாரில் ஆங்கிலத்தில் மட்டும் அரசு அலுவலக பெயர் பலகை
கூடலுாரில் ஆங்கிலத்தில் மட்டும் அரசு அலுவலக பெயர் பலகை
ADDED : ஏப் 21, 2025 08:34 PM

கூடலுார்; கூடலுார் கோட்ட கலால் அலுவலகம் பெயர் பலகை ஆங்கிலத்தில் மட்டும் வைக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மாநில அளவில், சமீபத்தில் அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அரசின் உத்தரவுகளை பின்பற்றி, 'அனைத்து அரசாணைகள் சுற்றாணைகள் தமிழில் வெளியிட வேண்டும்; அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டும் கையொப்பமிட வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலக பெயர்கள் தமிழிலும் இடம் பெற வேண்டும் என்ற விதி ஏற்கனவே உள்ளது.
இந்நிலையில், கூடலுார் கோட்ட கலால் அலுவலகத்தில், ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ளனர். இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், 'இரு மொழி கொள்கை அமலில் உள்ளதாக கூறும், தமிழக அரசு, கூடலுார் கோட்டா கலால் அலுவலம் பெயர் பலகையில், தமிழை தவிர்த்து, ஆங்கிலத்தில் மட்டும் எழுதி இருப்பது ஏற்று கொள்ள முடியாது.
எனவே, இதனை மாற்றி, தமிழிலும் பெயர் பலகை வைக்க வேண்டும்,' என்றனர்.