/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைக்கப்படும் அரசு பள்ளி வளாகம்
/
சீரமைக்கப்படும் அரசு பள்ளி வளாகம்
ADDED : பிப் 16, 2024 12:06 AM

மேட்டுப்பாளையம்:சிறுமுகை புதூரில், புதர் மண்டி கிடந்த, அரசு பள்ளி வளாகத்தை சீரமைத்து, சிறுவர் விளையாட்டு மைதானமாக மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
சிறுமுகைப்புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே முக்கால் ஏக்கரில், இப்பள்ளிக்கு சொந்தமான கட்டடங்களில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
காலப்போக்கில் வகுப்பறைகளின் மேல் கூரைகள் சிதிலமடைந்ததால், புதிய பள்ளி கட்டடத்திற்கு வகுப்புகள் மாற்றப்பட்டன.
அதன் பிறகு இந்த பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யாததால், புதர் மண்டி முள் காடாக மாறியது. இரவில் இங்கு பல்வேறு சமூக விரோத செயல்களும், நடந்து வந்தன.
இப்பள்ளி வளாகத்தை, சுத்தம் செய்யும் பணிகளில், முன்னாள் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி கவுன்சிலர் ரியாஸ் கூறுகையில்,' அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், முள் செடிகள் அதிக அளவில் வளர்ந்திருந்தன. அவற்றை ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்யப்பட்டது.
அவர்கள் வழங்கிய நன்கொடையால், பள்ளி வளாகத்தைச் சுற்றி கம்பிவேலியும், நுழைவாயிலில் கேட்டும் அமைக்கப்பட உள்ளது.
இப்பள்ளி வளாகத்தை சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன,' என்றார்.