/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் நூற்றாண்டு விழாவில் பெருமிதம்
/
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் நூற்றாண்டு விழாவில் பெருமிதம்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் நூற்றாண்டு விழாவில் பெருமிதம்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் நூற்றாண்டு விழாவில் பெருமிதம்
ADDED : பிப் 12, 2025 10:48 PM

குன்னுார், ;குன்னுார் உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு நிலத்தை கொடுத்து உதவிய ராவ்பகதுார் பெள்ளி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில், ஆசிரியை அல்லிராணி பேசுகையில், ''நீலகிரி மாவட்டம் உபதலை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, 1920ம் ஆண்டு பணிகள் நடந்து, 1925ம் ஆண்டில் கல்வி துவங்கப்பட்டது.100 வயது தாண்டி சரித்திரம் படைத்துள்ளது.
இந்த பள்ளியை பிரிட்டிஷ்காரர் ரிப்பன் பிரபு என்பவர் தங்க சாவியால் திறந்து வைத்தார்,'' என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரசு கொறடா ராமச்சந்திரன் பேசுகையில், ''தற்போது, அரசு பள்ளிகள் புதுப்பொலிவுடன் திகழ்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து பயன்பெற வேண்டும்,'' என்றார்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா பேசுகையில், ''தனியார் பள்ளிக்கு இணையாக தற்போது அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகிக்கின்றனர். அரசு நடத்தும் கலைத்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள், முழு திறமையை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்று பள்ளிக்கும் பெருமை சேர்க்கின்றனர்,'' என்றார்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில், முதல் மூன்று இடங்களை பெற்று, பொறியியல் கல்லுாரியில் பயிலும் மாணவி யுவராணி, ஐ.ஐ.டி.,யில் உயர்கல்வி படிக்கும் மாணவர் முத்தாசிர் உட்பட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவரான நீலகிரி மாவட்ட உதவி திட்ட அலுவலர் அர்ஜுணன் நூற்றாண்டு உறுதிமொழி வாசித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஐயரின் ரெஜி நுாற்றாண்டு அறிக்கை வாசித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார், சத்திய சாய் அறக்கட்டளை நிர்வாகி மேகநாதன் சாய், நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் நிர்வாகிகள் வினோத்குமார், கோவர்த்தனன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை, சித்ரா தொகுத்து வழங்கினார். உதவி தலைமையாசிரியை மகிலா நன்றி கூறினார்.