/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்று நாள் பயணமாக கவர்னர் ஊட்டி வருகை
/
மூன்று நாள் பயணமாக கவர்னர் ஊட்டி வருகை
ADDED : பிப் 16, 2024 02:09 AM

ஊட்டி;மூன்று நாள் பயணமாக, மாநில கவர்னர் ரவி நேற்று மாலை ஊட்டி வந்தார்.
மாநில கவர்னர் ரவி நேற்று, சென்னையில் இருந்து விமானம் மூலம், மதியம், 2:30 மணிக்கு கோவை விமான நிலையம்வந்தார். பின், கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை, 6:15 மணிக்கு வந்தடைந்தார். கலெக்டர் அருணா, எஸ்.பி., சுந்தரவடிவேல் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.
இன்று, (16ம் தேதி) ஊட்டி அடுத்த முத்தநாடு மந்துவில் உள்ள தோடர் இன பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். நாளை, 17ம் தேதி ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 18ம் தேதி காலை , 9:00 மணியளவில் ராஜ் பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
கவர்னர் வருகையையொட்டி ஊட்டி கவர்னர் மாளிகை, தாவரவியல் பூங்கா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.