/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 21, 2025 08:37 PM

ஊட்டி; ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜாய்ஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மழலையர் வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட வண்ணமயமான அங்கிகளை அணிந்து வந்து, கல்வி குறித்து மழலைமொழியில் பேசினர். பிற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
பள்ளி தாளாளர் உமர் பரூக் பேசுகையில், ''மழலையருக்கு பட்டமளிப்பு விழா என்பது அவர்களின கல்வி வாழ்க்கை துவக்கத்தில், ஊக்கப்படுத்த நடத்தப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இது மாணவர்களின் கல்வி பயணத்தில் நீங்கா இடத்தை பெறும்.
மேலும், அவர்கள் உயர் கல்வியில் பட்டம் பெறும் வரையில் இந்த நிகழ்வு அவர்களின் மனதை விட்டு போகாது,'' என்றார். விழாவில் நுாற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மழலையரின் பெற்றோர் திரளாக பங்கேற்று, அங்கிருந்த கண்காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.