/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் மோட்டார் இயங்குவதற்கான மின் இணைப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

ADDED : நவ 18, 2025 01:47 AM

கூடலுார்: முதுமலை முதுகுழியில் நடந்த வன கிராமசபை கூட்டத்தில், குடிநீர் மோட்டார் இயக்குவதற்கான மின் இணைப்பு வழங்க வலியுறுத்தினர்.
முதுமலை ஊராட்சி முதுகுழியில், வன கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். வன உரிமை குழு தலைவர் தேவதாஸ், செயலாளர் லலிதா, குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள்:
முதுகுழி கிராம மக்களின் குடிநீர் சேவையில், கிணற்றிலிருந்து குடிநீர் தொட்டிக்கு, தண்ணீர் எடுத்து செல்வதற்காக மின் மோட்டார் இயக்க, மின் இணைப்பு கேட்டு மின் துறைக்கு, 40 ஆயிரம் ரூபாய், தொகை செலுத்தியும், இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை.
மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதுகுழி - கூவக்கொல்லி சாலையை சீரமைக்க வேண்டும். முதுகுழியிலிருந்து வெளியேற்றப்பட்டு நரிமூலா பகுதியில் குடியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. அவர்கள், மீண்டும் முதுகுழிக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கூட்டத்தில் டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.