/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பணை உடைந்ததால் நீரின்றி வறண்டது :சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : நவ 17, 2025 01:15 AM

பந்தலூர்: தடுப்பணை உடைந்ததால் வீணாகும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பந்தலூர் அருகே தேவாலா பகுதி, இரண்டாவது சிரபுஞ்சி என்ற பெருமை பெற்றது. இந்த பகுதியில் அதிகரிக்கும் கட்டடங்கள், வன வளம் அழிப்பு, தண்ணீரை தேக்கி வைக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால், இரண்டாவது சிரபுஞ்சி என்ற பெருமையை இழந்து வருகிறது.
தேவாலா பஜாரை ஒட்டிய ஏரோடு மலைப்பகுதியில் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர், வழிந்தோடும் நீரோடையின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த நீரோடை பாண்டியார் -புன்னம்புழா ஆற்றின் கிளை ஆறாக உள்ளது. இங்குள்ள தடுப்பணை முழுமையாக உடைந்துள்ளதால், மழை பெய்யும் போது தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மழை பெய்தும் தடுப்பணை தண்ணீரின்றி வறண்டதால் குடிநீர், வன விலங்குகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுப்பணையை சீரமைக்க வேண்டும். என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.