தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம்

50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம்

50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம்


UPDATED : அக் 30, 2026 06:33 PM

ADDED : அக் 30, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 06:33 PM ADDED : அக் 30, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், 50 சதவீதம் மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீவன விரயத்தை குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செறிமான தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை பெருக்கவும், வேளாண் பட்ஜெட் அறிவிப்பு திட்டம், 2026–27ம் ஆண்டிற்கு, 50 சதவீதம் மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் வினியோகிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறைக்கு என, நடப்பாண்டில் புல் நறுக்கும் கருவி, ஒரு பயனாளிக்கு வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போர்கள், இத்திட்டத்தில் பயன் பெற அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி, டிச., 5ம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us