UPDATED : அக் 30, 2026 07:42 PM
ADDED : அக் 30, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார்– ஊட்டி இடையே மலை ரயில் இயக்கம் மீண்டும் துவங்கப்பட்டது.
குன்னுாரில் கடந்த, 23ம் தேதி இரவு கொட்டி தீர்த்த கனமழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன.
மேலும், குன்னுார்– மேட்டுப்பாளையம் இடையே, 40 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகள் கடந்த ஏழு நாட்களாக துரித கதியில் நடந்து வருகின்றன. மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மழையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த, ஊட்டி குன்னுார் மலை ரயில் இயக்கம் மட்டும் நேற்று துவங்கியது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்
