/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேய்ச்சல் நிலமான நீர்ப்பிடிப்பு பகுதி மழை இல்லாததால் பாதிப்பு
/
மேய்ச்சல் நிலமான நீர்ப்பிடிப்பு பகுதி மழை இல்லாததால் பாதிப்பு
மேய்ச்சல் நிலமான நீர்ப்பிடிப்பு பகுதி மழை இல்லாததால் பாதிப்பு
மேய்ச்சல் நிலமான நீர்ப்பிடிப்பு பகுதி மழை இல்லாததால் பாதிப்பு
ADDED : மார் 03, 2024 10:47 PM

ஊட்டி:ஊட்டி அருகே, போர்த்தி ஹாடா நீர் பிடிப்பு பகுதி சில ஆண்டுகளாக வறண்டு காணப்படுவதால் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
மஞ்சூர் குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா, கெத்தை மற்றும் பில்லுார் அணைகளுக்கு, போர்த்தி ஹாடா நீர் பிடிப்பு பகுதி முக்கிய நீராதாரமாக உள்ளது.
மாவட்டத்தின் சராசரி மழை அளவு, 130 செ.மீ., உள்ள நிலையில், கடந்தாண்டு, கோடை, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை, 55 செ.மீ., பதிவாகியுள்ளது.
தற்போதுவரை, குடிநீர் தேவை பூர்த்தியானாலும், நடப்பாண்டில் கோடை வெயில் தாக்கத்தால் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.
மின் உற்பத்தி அணைகளில் தண்ணீர் அளவு சரிந்துள்ளது. அணைகளில் உள்ள தண்ணீர் இன்னும் ஒரு மாதம் மின் உற்பத்திக்கு தாக்குபிடிக்கலாம். அதில், கடந்த காலங்களில் கோடை காலங்களில் போர்த்தி ஹாடா நீர்பிடிப்பு பகுதி வறண்டதால் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
இப்பகுதியில் உள்ள, போர்த்தி ஹாடா, இத்தலார், எல்லக்கண்டி பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இப்பகுதியை விளையாட்டு களமாக பயன்படுத்தி வருகின்றனர்.

