/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடி சுற்றுபுறங்களில் பசுமை தீபாவளி அவசியம்; சுற்றுலா விடுதிகளில் அத்துமீறினால் கடும் நடவடிக்கை

ADDED : அக் 16, 2025 08:25 PM

கூடலுார்: முதுமலை, மசினகுடியில் சுற்றுலா விடுதிகள் கிராமங்களில், வன உயிரினங்களை காக்க, பட்டாசு இல்லாத, பசுமை தீபாவளி கொண்டாட வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள மசினகுடி கோட்டம் வனப்பகுதி விலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால், அவைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, நடப்பு ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, பட்டாசு இல்லாத பசுமை தீபாவளி கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் விடுதிகள், குடியிருப்புகளுக்கு சிங்கார வனச்சரகர் தனபால் தலைமையில் வன ஊழியர்கள் துண்டு பிரசுரம் வழங்கி வருவதுடன், பொது இடங்களில் 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர்.
முதுமலை துணை இயக்குனர் வித்யாதர் கூறுகையில், ''மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்திலுள் அமைந்துள்ளது. இப்பகுதி, 3 மாநிலங்கள் இணையும் நிலப்பரப்பாகும்.
புலிகள் அதிகமாக வாழக்கூடிய இடமாகும். மேலும், யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, பாறு கழுகு கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய வகை வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாகும்.
இவைகளுக்கு இடையூறு ஏற்படுதாத வகையில், தீபாவளி பண்டிகையை, காற்று மாசு, வனவிலங்குகள் பாதிக்கப்படாத வகையில், பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, பசுமை தீபாவளி கொண்டாட அனைவரும் உறுதி கொண்டு ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.