/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆப்பிரிக்கன் காய்ச்சலால் காட்டு பன்றிகள் உயிரிழப்பு: சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
/
ஆப்பிரிக்கன் காய்ச்சலால் காட்டு பன்றிகள் உயிரிழப்பு: சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
ஆப்பிரிக்கன் காய்ச்சலால் காட்டு பன்றிகள் உயிரிழப்பு: சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
ஆப்பிரிக்கன் காய்ச்சலால் காட்டு பன்றிகள் உயிரிழப்பு: சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
ADDED : அக் 16, 2025 08:24 PM

கூடலுார்: முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதித்து, காட்டு பன்றி உயிரிழந்ததை தொடர்ந்து, கூடலுார் வழியாக நீலகிரிக்கு வரும் வெளி மாநில சரக்கு வாகனங்களுக்கு மாநில எல்லையில், கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று துவக்கப்பட்டது.
கேரள மாநிலம், கோட்டயம், திருச்சூர் பகுதியில் வளர்ப்பு பன்றிகளுக்கு, ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நோய் பரவலை தடுக்க வளர்ப்பு பன்றிகள் கொல்லப்பட்டன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி வனப்பகுதியில், கடந்த மாதம் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதித்து, 6 காட்டு பன்றிகள் உயிரிழந்தன என்பது, ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழக - கேரளா எல்லையான, கூடலுார் நாடுகாணி, தாளூர், பாட்டவயல்; தமிழக கர்நாடக எல்லையான கக்கனல்லா உள்ளிட்ட, 8 சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
பணியில், தலா ஒரு கால்நடை டாக்டர், கால்நடை ஆய்வாளர் பரமரிப்பு உதவியாளர் கொண்ட குழுவினர், வெளி மாநிலங்களில் இருந்து, சரக்கு வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி தெளித்தபின் நீலகிரிக்குள் அனுமதித்து வருகின்றனர். மேலும், பன்றி மற்றும் அவைகளின் இறைச்சி, உணவு பொருட்கள் எடுத்து வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.
அதிகாரிகள் கூறுகையில், 'பன்றிகளை தாக்கும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல், மனிதர்கள் மற்றும் பிற வனவிலங்குகள், கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. முன்னெச்சரிக்கையாக, மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு செய்து, சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தபின் அனுமதிக்கப்படுகிறது. அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை இப்பணி தொடரும்,'என்றார்.