/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை தொழிற்சாலை பழங்குடியினருக்கு 'எட்டா கனி'
/
பசுந்தேயிலை தொழிற்சாலை பழங்குடியினருக்கு 'எட்டா கனி'
பசுந்தேயிலை தொழிற்சாலை பழங்குடியினருக்கு 'எட்டா கனி'
பசுந்தேயிலை தொழிற்சாலை பழங்குடியினருக்கு 'எட்டா கனி'
ADDED : நவ 27, 2024 09:00 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் பழங்குடியின மக்களுக்கான இயற்கை பசுந்தேயிலை தொழிற்சாலை, செயல்படுத்தாமல் உள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட, கோழித்துறை பனிங்குடியினர் கிராமத்தில், மாநில அரசு நிதி உதவியுடன், 2016-17ம் ஆண்டு பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இயற்கை பசுந்தேயிலை தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்காக, 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு, 'தேயிலை வாரிய சான்றிதழ் பெறுவது, கட்டடம் கட்டுவது, எந்திரங்கள் வாங்குவது, மின் இணைப்பு, போக்குவரத்து, பசுந்தேயிலை தயாரிப்பது, பேக்கிங், விற்பனை செய்வது, பழங்குடியின பெண்களுக்கு பயிற்சி அளிப்பது,' போன்ற தேவைகளுக்காக, பழங்குடியினர் ஆய்வு மைய (டி.ஆர்.சி) இயக்குனர் மேற்பார்வையில் தொழிற்சாலை நிறுவ ஒப்படைக்கப்பட்டது.
தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை சமன் செய்யப்பட்டு, நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், சில பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளன.
ஆனால், எட்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், தேயிலை தொழிற்சாலை கட்டடம் கட்டப்படவில்லை. இதனால், பழங்குடியின மக்களின் இயற்கை தேயிலை தொழிற்சாலை திட்டம் எட்டா கனியாக உள்ளது.
நீலகிரி பழங்குடியினர் தேயிலை உற்பத்தியாளர் சங்க செயலாளர் சண்முகம் கூறுகையில், ''தற்போது, பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனரிடம் உள்ள, 62.55 லட்சம் ரூபாயில், பொதுப்பணித்துறை கட்டட மதிப்பீடு படி, 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, மழை காலத்திற்கு முன்பாக, தேயிலை தொழிற்சாலை கட்டடம் கட்டும் பணியை துவக்க வேண்டும்.
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளரிடம் மாவட்ட கலெக்டர் கலந்தாலோசித்து, 18 பழங்குடியின கிராம மக்கள் பயன் பெறும் வகையில், திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.