/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜி.ஆர்.ஜி., பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
/
ஜி.ஆர்.ஜி., பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
ஜி.ஆர்.ஜி., பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
ஜி.ஆர்.ஜி., பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
ADDED : பிப் 16, 2025 11:14 PM

கூடலுார் ;மசினகுடி வாழை தோட்டம், ஜி.ஆர்.ஜி., பள்ளி ஆண்டு விழாவில் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு; கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
மசினகுடி, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்.
விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்களை ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் நந்தினி ரங்கசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு; கலை நிகழ்ச்சியில் அசத்தலாக இருந்தது. விழாவில், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.