ADDED : ஆக 25, 2026 06:01 PM
ஊட்டி: மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, வரும் 28ம் தேதி சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.
கலெக்டர் லட்சுமிபவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில், 28ம் தேதி காலை, 10:00 மணி அளவில், ஊட்டி கார்டன் சாலையில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் எளிதில் வங்கி கடன் பெறுவது தொடர்பாக, வழிவகைகளை முன்னோடி வங்கி மேலாளர், கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர், சிறப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
