/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ மையத்தில் துப்பாக்கி கண்காட்சி; மாணவ, மாணவியர் வியப்பு
/
ராணுவ மையத்தில் துப்பாக்கி கண்காட்சி; மாணவ, மாணவியர் வியப்பு
ராணுவ மையத்தில் துப்பாக்கி கண்காட்சி; மாணவ, மாணவியர் வியப்பு
ராணுவ மையத்தில் துப்பாக்கி கண்காட்சி; மாணவ, மாணவியர் வியப்பு
ADDED : அக் 28, 2024 11:28 PM

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், காலாட்படை தினத்தையொட்டி துப்பாக்கி கண்காட்சி நடத்தி, அதன் சிறப்புகள் மற்றும் தனித்திறன் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 78வது காலாட்படை தினத்தையொட்டி பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில், துப்பாக்கி கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், போரில் பயன்படுத்தும் பல்வேறு துப்பாக்கிகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
அதில், 'எல்.எம்.ஜி., கன், எம்.பி., 9 கன், ரைபிள், ராக்கெட் லான்ச்சர், மிஷின் கன்,' உட்பட பழைய மற்றும் நவீன துப்பாக்கிகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
இதில், துப்பாக்கிகளை பயன்படுத்துவது அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து மாணவ, மாணவியருக்கு ராணுவ வீரர்கள் விளக்கம் அளித்தனர். அதில், குழந்தைகள் உட்பட மகளிரும் ஆர்வத்துடன் பங்கேற்று இதன் சிறப்பு குறித்து அறிந்து கொண்டனர்.
பாய்ஸ் கம்பெனி புனித ஆன்ஸ் பள்ளி , வசம்பள்ளம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ராணுவத்தின் சிறப்பு மற்றும் இளைஞர்கள் சேர்வது குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

