ADDED : மார் 12, 2024 12:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் திருக்கோவில் பூ குண்டம் கொடியேற்று விழா நடந்தது.
இம்மாதம், 17ம் தேதி காலை, 8.00 மணிக்கு பூ குண்டம் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு தீப வழிபாடுகளும், பூஜைகளும், நடக்கின்றன. பூ குண்டத்துக்கு தேவையான விறகு, கற்பூர கட்டி, வெண்ணெய், பால் வழங்குபவர்கள் இம்மாதம், 16ம் தேதிக்குள் கோவிலுக்கு கொண்டு வந்து செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார் விஸ்வகர்மா குலத்தார், பெரியநாயக்கன்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

