/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துக்கடாபாபாஜி ஆலயம் குருபூஜை பெருவிழா
/
துக்கடாபாபாஜி ஆலயம் குருபூஜை பெருவிழா
ADDED : நவ 11, 2025 10:10 PM
ஊட்டி: ஊட்டி ஸ்ரீ துக்கடாபாபாஜி ஆலயத்தில், 132வது குருபூஜை பெருவிழா சிறப்பாக நடந்தது.
ஊட்டி அருகே, மஹாத்மா ஸ்ரீ துக்கடாபாபாஜி ஆலயத்தில், குருபூஜை பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, 132வது குரு பூஜை பெருவிழாவை ஒட்டி காலை, 7:00 மணி முதல் 10:00 மணி வரை ேஹாமம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை அபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் ஆசியுரை நிகழ்ச்சி நடந்தது. பின்பு நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். குருபூஜை பெருவிழாவில், கோவில் அர்ச்சகர் சீனிவாசன், ஆலய அங்கத்தினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

