/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குட்கா விற்றவர் கைது: பொருட்கள் பறிமுதல்
/
குட்கா விற்றவர் கைது: பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜன 28, 2024 11:43 PM
கோத்தகிரி:கோத்தகிரியில் குட்கா பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, கஞ்சா, புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம், கோத்தகிரி பகுதியில் அதிகரித்துள்ளது. போலீசார் தொடர்ந்து சோதனை செய்தும், இவ்வகை பொருட்களின் விற்பனை தொடர்கிறது.
நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவுப்படி, போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கோத்தகிரி அரவேனு பகுதியில் உள்ள வெற்றிலைக் கடையில், போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்படி, எஸ்.ஐ., யாதவ கிருஷ்ணன் தலைமையில், காவலர் முஜாஹிர் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர், 40 என்பவர், 38 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 50 பண்டல் புகையிலை உள்ளிட்ட, குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.