/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் பரவல் சோதனை சாவடிகளில் சுகாதார துறை ஆய்வு

ADDED : ஜூலை 11, 2025 11:24 PM

பந்தலுார்,; கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் 'நிபா' வைரஸ் பரவி வருகிறது.
வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை உட்கொள்வது வாயிலாகவோ, நிபா வைரஸ் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் கேரளாவில், மலப்புரம், பாலக்காடு மாவட்டத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில், கேரள எல்லையில் உள்ள, நீலகிரி மாவட்டம் நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு உள்ளிட்ட, 8 -சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
--வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கூறுகையில், ''கேரளாவின் சில மாவட்டங்களில், 'நிபா வைரஸ்' பரவி வருகிறது.  வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, துாக்கமின்மை, மூச்சு திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும். தற்போது, கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் பகுதியில் இருந்து தமிழக எல்லையான நாடுகாணி வழியாக அதிக அளவிலான வாகனங்கள் தமிழகத்திற்கு வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் வாகன சோதனை நடந்து வருகிறது. காய்ச்சல் உள்ளவர்களை அனுமதிப்பதில்லை,'' என்றார்.