ADDED : அக் 28, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள, 1,429 சுகாதார ஆய்வாளர்களுக்கான தேர்வு நடக்க உள்ளது.
தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக பொது சுகாதாரத் துறையின் கீழ், ஏற்கனவே ஜூலை 11ல் வெளியிடப்பட்ட அறிவிப்புக்குப் பதிலாக, தற்போது காலியாக உள்ள, 1,429 சுகாதார ஆய்வாளர் நிலை 2க்கான ஆள் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியுள்ளோர், 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தி, அடுத்த மாதம் 16ம் தேதிக்குள், 'www.mrb.tn.gov.in' என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

