/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
/
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
ADDED : அக் 28, 2025 12:07 AM

ஊட்டி: நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் உடையது. இந்த பூண்டுக்கு எப்போதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் வரவேற்பு காணப்படும்.
ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் விளைவித்த பூண்டை அறுவடை செய்து, லாரிகள் மூலம் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
ஆனால், தற்போது ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மிக குறைந்த விலையில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுவதுடன், உள்ளூர் மக்களின் பூண்டு வரத்தும் அதிகரித்துள்ளது.
மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்ததால், பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது ஊட்டி சந்தைகளில் கிலோ 30 -- 80 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விலை சரிந்ததால் பூண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

