/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் நிலையத்தில் புதர் செடிகளால் சுகாதார சீர்கேடு
/
பஸ் நிலையத்தில் புதர் செடிகளால் சுகாதார சீர்கேடு
ADDED : மார் 19, 2025 08:08 PM

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் புதர் செடிகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையத்தில், ஊட்டி, கக்குச்சி மற்றும் துானேரி வழித் தடங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
சாலையை ஒட்டி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தற்போது, இரு சக்கர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது.
அதன் கீழ் பகுதியில் உள்ள இடத்தில் செடிகள் ஆக்கிரமித்து புதர் போல் காட்சியளிக்கிறது. அங்கு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் பஸ் சிற்க்காக காத்திருக்கும் போது, துர்நாற்றத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம், புதர் செடிகளை அகற்றி துாய்மை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.