/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயனற்ற கழிப்பிடத்தால் சுகாதார சீர்கேடு
/
பயனற்ற கழிப்பிடத்தால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 05, 2025 08:51 PM
கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, ராம்சந்த் பகுதியில், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இங்குள்ள நூலகம் அருகே, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு பயனற்று கிடக்கிறது.
கழிப்பிட கட்டடத்தின் மேல், செடிகள் ஆக்கிரமித்து, புதர் மண்டி கிடப்பதாலும், வெளிப்புறத்தில் சிறுநீர் கழிப்பதாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புதர் மறைவில், ஒதுங்கும் தெரு நாய்கள் அவ்வப்போது திடீரென வெளியே வருவதால், அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது.
நகராட்சி நிர்வாகம், கழிப்பிடத்தை புதுப்பித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், கட்டடத்தை வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்க வேண்டும்.

