/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு
/
குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 02, 2025 10:05 PM

கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில், 200 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் குப்பை தொட்டியில், குப்பைகள் கொட்டப்படுகிறது. பல நாட்களாக, குப்பைகள் அகற்றப்படாததால் சிதறி கிடக்கின்றன.
காட்டுப்பன்றிகள் அடிக்கடி குப்பைகளை கிளறுவதால், துர்நாற்றத்துடன் கொசு தொல்லை அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும், காகம் உள்ளிட்ட பறவைகள் குப்பைகளை உண்பதற்காக எடுத்துச் சென்று, வீட்டு வாசல் மற்றும் மொட்டை மாடிகளில் வீசுவதால், துர்நாற்றம் அதிகரித்துள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் கூடுதலாக துாய்மை பணியாளர்களை பணியமர்த்தி, கிராமத்தில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.

