/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகாலையில் நீர் பனி தாக்கம் அதிகம்; பந்தலுார் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர்

ADDED : டிச 18, 2024 08:32 PM

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை நீர்பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கடும் குளிர் நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதி, கேரளா வயநாடு பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், நீலகிரிக்கு உரித்தான குளிரான காலநிலைக்கு பதிலாக வெப்பமான காலநிலை நிலவுவது வழக்கம்.
இதனால், கேரளா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான விவசாய பணிகளும், பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் ஏசி மற்றும் மின்விசிறிகள் உதவியுடன் உறங்குவது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காலை நேரங்களில், நீர் பனியின் தாக்கம் அதிகரித்து கடுமையான குளிர் நிலவி வருகிறது.
மாலை நான்கு மணிக்கு மேல் சில்லென்ற குளிர் நிலவதுவங்கி, மறுநாள் காலை, 10:00 மணி வரை இதன் தாக்கம் உள்ளது.
இதனால், காலை நேரங்களில் பணிக்கு செல்லும் மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தேயிலை தோட்ட இலைகளில் பனிதுளி காணப்படுகிறது.
இந்த காலநிலையில், இரவில் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் வன ஊழியர்கள் அவதிப்படும் சூழல் உள்ளது.