/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாரம்பரிய அந்தஸ்து தினம்;: கேக் வெட்டி கொண்டாட்டம்
/
பாரம்பரிய அந்தஸ்து தினம்;: கேக் வெட்டி கொண்டாட்டம்
பாரம்பரிய அந்தஸ்து தினம்;: கேக் வெட்டி கொண்டாட்டம்
பாரம்பரிய அந்தஸ்து தினம்;: கேக் வெட்டி கொண்டாட்டம்
ADDED : ஜூலை 15, 2025 08:16 PM

குன்னுார்; நீலகிரி நீராவி மலை ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்து கிடைத்த, 20வது ஆண்டு விழாவில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கடந்த, 1854ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை மலை ரயில் பாதை அமைத்து, 1899ல் போக்குவரத்து துவங்கியது. நுாற்றாண்டு பெருமை பெற்ற இந்த மலை ரயிலுக்கு, கடந்த 2005 ஜூலை 15-ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது.
இந்த சிறப்பு பெற்ற நாளையொட்டி, மலை ரயில் நீராவி ரத அறக்கட்டளை சார்பில், நேற்று, குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்த, 20வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த ஊட்டி மலை ரயிலில், குன்னுாரில் இறங்கிய முதல் பயணியருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கேக் வெட்டி, சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நீராவி மலை ரயிலின் பாரம்பரிய அந்தஸ்து குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நீராவி மலை ரயில் சிறப்பு குறித்து, இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மலை ரயில் நீராவி ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜ் கூறுகையில்,''1997ல் ஊட்டி - ரன்னிமேடு வரை இயக்கிய நீராவி மலை ரயிலில் பயணம் செய்த, ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைகழக பேராசிரியர் ராபர்ட் லீ என்பவரின் வழிகாட்டுதலின்படி, பாரம்பரிய அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
அதன்பின் பல்வேறு பரிசீலனைகள் நடந்த பின் அங்கீகாரம் கிடைத்தது. ரயில் மேம்பாடு மற்றும் சுற்றுலாவை, பிரதமர் மோடி ஊக்குவித்து வரும் நிலையில், சர்வதேச சிறப்பு பெற்ற மலை ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகிறது. கடந்த, 1914ல் சுவிட்சர்லாந்தில் வடிவமைத்து, 1918 ஆண்டு முதல் நீலகிரியில் இயக்கப்பட்டு வந்த 'எக்ஸ் கிளாஸ் 37384' நிலக்கரி நீராவி இன்ஜின் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் பரமேஸ்வரன், ராமகிருஷ்ணன் செய்திருந்தனர்.

