ADDED : செப் 11, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே நாயக்கன் சோலை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 38. இவர் மீது கடந்த, 2025ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ், சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளிவந்த அவர், பந்தலுார் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு நீதிபதி பிரபாகரன் வாரண்ட் பிறப்பித்த நிலையில், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசீலன், அடிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார், இவரை தேடி வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பதுங்கி இருந்த அருண்குமாரை, கைது செய்த போலீசார் பந்தலுார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
