sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 விடுமுறை வருது: ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்

/

 விடுமுறை வருது: ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்

 விடுமுறை வருது: ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்

 விடுமுறை வருது: ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்


ADDED : டிச 06, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: டிச., இறுதி வாரத்தில் இருந்து ஜன., இறுதி வரை அதிக விடுமுறை நாட்கள் வருவதையொட்டி, ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் நீலகிரிக்கு சுற்றுலாப்பயணிகள் வந்தாலும், விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையில் வருவர். பெரும்பாலானவர்களுக்கு, மலை ரயில் பயணம் இல்லாமல், ஊட்டி சுற்றுலா முழுமையடைவதில்லை.

சுற்றுலாப் பயணிகள், இயற்கை ஆர்வலர்கள், பாரம்பரிய விரும்பிகள், ரயில் பயண நேசர்கள் ஆகியோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில், நீலகிரி மலை ரயில் நிர்வாகம், சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி மேட்டுப்பாளையத்தில் காலை, 9:10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06171) ஊட்டியை மதியம், 2:25 மணிக்கு சென்றடையும்.இயக்கப்படும் நாட்கள்: டிச., 25, 27, 29, 31. ஜன., 2,4, 15, 17, 23, 25.

ஊட்டியில் இருந்து காலை, 11:25 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06172), மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

நாட்கள்: டிச., 26, 28, 30. ஜன., 1, 3, 05, 16, 18, 24, 26.

இருக்கை வசதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, 40 முதல் வகுப்பு இருக்கைகளும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். குன்னுாரில் இருந்து ஊட்டி வரை, 80 முதல் வகுப்பு இருக்கைகளும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும்.

ஊட்டி - குன்னுார் ஊட்டியில் இருந்து மதியம், 2:50க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06176), குன்னூரை மாலை, 3:55 மணிக்குச் சென்றடையும்.

நாட்கள்: டிச., 25, 27, 29, 31. ஜன., 2, 4,15, 17, 23, 25.

குன்னுாரில் இருந்து காலை, 9:20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06199), ஊட்டியை காலை 10:45 மணிக்குச் சென்றடையும். நாட்கள்: டிச., 26, 28, 30. ஜன., 1, 3, 5, 16, 18, 24, 26.

குன்னுார் - ஊட்டி குன்னுாரில் இருந்து காலை, 8:20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06177) ஊட்டியை காலை 9:40க்கு சென்றடையும்.

நாட்கள்: டிச., 25 முதல் ஜன., 4 வரை மற்றும் ஜன., 16, 17, 18, 24, 25, 26 ஊட்டியில் இருந்து மாலை, 4:45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06180), குன்னுாரை மாலை 5:55 மணிக்குச் சென்றடையும்.

நாட்கள்: டிச., 25 முதல் ஜன., 4 வரை மற்றும் ஜன., 16, 17, 18, 24, 25, 26

இருக்கை வசதி: 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு.

மூன்று முறை ஜாய் டிரைன் இதே நாட்களில், தினமும், 3 முறை ஊட்டி- கேத்தி இடையே, 'ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்' எனும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நேரம்: காலை 9:45, காலை 11:30, மாலை 3:00 மணி.

நாட்கள்: டிச., 25 முதல் ஜன., 4 வரை மற்றும் ஜன., 16, 17, 18, 24, 25, 26.






      Dinamalar
      Follow us