/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீபம் ஏற்றும் விவகாரம் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
தீபம் ஏற்றும் விவகாரம் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
தீபம் ஏற்றும் விவகாரம் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
தீபம் ஏற்றும் விவகாரம் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 05:25 AM

ஊட்டி: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, மாநில அரசை கண்டித்து, ஊட்டியில் பா.ஜ., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் பரமேஷ்வரன், ஈஸ்வரன், பொதுச் செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, தீபம் ஏற்ற அனுமதி மறுத்த கலெக்டர், போலீசார் மற்றும் இந்து விரோத மாநில அரசை கண்டித்தும், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகி ராஜா உட்பட, கட்சியினரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதில், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட விவசாய அணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு ஒன்றிய தலைவர் மஞ்சுளா, மகளிரணி நிர்வாகி சபிதா போஜன் உட்பட, திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். ஊட்டி நகர தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

