sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 வாக்காளர் பட்டியலில் குளறுபடியுடன் பதிவேற்ற பணி: உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவு

/

 வாக்காளர் பட்டியலில் குளறுபடியுடன் பதிவேற்ற பணி: உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவு

 வாக்காளர் பட்டியலில் குளறுபடியுடன் பதிவேற்ற பணி: உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவு

 வாக்காளர் பட்டியலில் குளறுபடியுடன் பதிவேற்ற பணி: உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவு


ADDED : டிச 06, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் உட்பட, குன்னுார் தொகுதியின் பல இடங்களில் இறுதி நேர வாக்காளர் திருத்த பட்டியல் குளறுபடியுடன் பதிவேற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குன்னுார் சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து 286 வாக்காளர் கள் இருந்ததில், எஸ்.ஐ. ஆர்., திருத்தத்தின் பிறகு, 227 பூத்களில், 16 ஆயிரத்து 123 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தற்போது ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 163 வாக்காளர்கள் இருப்பதாக முதல் கட்ட தகவலில் அறிவிக்கப்பட்டது.

அவசர கதியில் பதிவேற்றம் இந்நிலையில், 'வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய பட்டியலில், 1,299 வாக்காளர்கள் உள்ள, பாகம் 138ல், பலரும் இடம் பெயர்ந்ததால், பி.எல்.ஓ.,க்கள் ஆய்வில், 'இல்லை' என, உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், '10 சதவீத பதிவு கூட ஏற்றப்படவில்லை. மறுபுறம் ராணுவத்தில் பணி புரிவோர் பலர் இடம் பெயர்ந்ததால், தற்போது அங்கு, 60 சதவீதம் மட்டுமே வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆளும் கட்சியின் அழுத்தத்தால், கடைசி நேரத்தில் அவசர கதியில் பதிவேற்றம் நடந்துள்ளது,' என, எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

13 ஆண்டுகளாக நீக்கம் இல்லை உதாரணமாக, 138 பாகத்தில், ஒரே பக்கத்தில், 855, 875, எண்களில் ஜெபமாலை என்பவரின் பெயர் இரு முறை உள்ளது. 614, 615 எண்களில், ஜாய்ஸ்புளோரா; 627, 628 எண்களில் கிளாடிஸ் என்ற பெயர் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது. மேலும், 2008ம் ஆண்டு முன்னாள் வாரிய முதன்மை செயல் அலுவலர் ராஜஹன்ஸ் அவஸ்தி, மனைவி மம்தா அவஸ்தி ஆகியோர் இடம் பெயர்ந்தனர். 13 ஆண்டுகளாகியும் அந்த பெயர்கள் நீக்கப்படாமல், 864, 865 எண்களில் உள்ளது.

இறந்தவருக்கு இரு ஓட்டு 880 எண்ணில் உள்ள ஆரோக்கியநாதன் என்பவர் இறந்தும், சின்ன வண்டிச்சோலை, பேரட்டி ஆகிய இடங்களிலும் பெயர்கள் உள்ளன. தற்போது வெளியான முதற்கட்ட தற்காலிக பெயர் நீக்க பட்டியலில் இந்த பெயர்கள் இடம் பெறாமல் இருப்பது குளறு படிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், குன்னுார் நகராட்சி, 20 வார்டு டென்ட்ஹில் பகுதியில் வாக்காளர்கள் இல்லை என தெரிய வந்தும், நகராட்சியில் பல பெயர்களை பதிவேற்றம் செய்த போது, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவேற்றம் நிறுத்தப்பட்டது. அதில், அதிகபட்சமாக, 252 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன. இது போன்ற பல இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன.

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு கூறுகையில்,''வாக்காளர் சிறப்பு திருத்தத்தில், பெயர் விடுபட்டிருந்தால், பார்ம்-6 கொடுத்து சேர்த்து கொள்ளலாம் என்ற சூழ்நிலை இருந்தும், அவசரமாக ஆளும் கட்யினரின் அழுத்தத்தால் பல பெயர்கள் பதிவேற்றப்பட்டுள் ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இதன் ஆதாரங்கள், தலைமை தேர்தல் ஆணையம், மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன,'' என்றார்.

புகாரின் பேரில் ஆய்வு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், ''குன்னுார் தொகுதியில் கடைசி நேரத்தில் அவசரகதியில் விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், ஆய்வு செய்ய உதவி கலெக்டரிடம் கூறப்பட்டுள்ளது. தற்போது, நீக்கப்பட்ட பட்டியல் உட்பட வாக்காளர் விவரங்கள் அனைத்து கட்சியின் பி.எல்.ஒ.,க்கள் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் சரிபார்த்து, 7ம் தேதிக்குள் தவறுகள் இன்றி சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு ஆய்வு செய்து, 11ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us