/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊர்க்காவல் படை வீரர் ஆற்றில் மூழ்கி பலி: உடல் மீட்பு
/
ஊர்க்காவல் படை வீரர் ஆற்றில் மூழ்கி பலி: உடல் மீட்பு
ஊர்க்காவல் படை வீரர் ஆற்றில் மூழ்கி பலி: உடல் மீட்பு
ஊர்க்காவல் படை வீரர் ஆற்றில் மூழ்கி பலி: உடல் மீட்பு
ADDED : மார் 30, 2024 05:20 PM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் சேர்ந்தவர் மணி, 29.
இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் நண்பர்களுடன் நேற்று, மதியம், பாண்டியார் டான்டீ வழியாக, குண்டபுழா வனத்தை ஒட்டிய, பாண்டியார் - புன்னம்புழா ஆற்றுக்கு சென்றார். மாலை, 5.30 மணிக்கு இவர்கள் ஆற்றில் குளித்தனர். அப்போது, நீரினுள் சென்ற மணி, நீண்ட நேரம் வெளியே வரவில்லை. நண்பர்கள் தேடி கிடைக்கவில்லை. இரவு, வெளியே வந்த நண்பர்கள், மணி நீரில் காணாமல் போனது குறித்து, போலீஸ் உள்ளிட்ட, பலருக்கும் தகவல் தெரிவித்தனர். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு, என்பதால், இரவு யாரும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று, காலை தேவாலா டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், போலீசார், வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். கூடலூர் தீயணைப்பு நிலை அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில், காணாமல் போன மணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பகல் 12:30 மணிக்கு உயிரற்ற மணியின் உடலை மீட்டனர். தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

