/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கவுரவ விரிவுரையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : டிச 15, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில்,அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்க பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்றார். சங்க தலைவர் சேவியர் இஞ்ஞானி முத்து தலைமை வகித்தார். மாநில தலைவர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், 'விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான வழக்கில், கல்லுாரி கல்வி ஆணையரின் மனுவிற்கு பதிலளிக்கும் வகையில், தெளிவுரை வழங்குவது; தீர்மான நகலை, மாநில முதல்வருக்கு அனுப்புவது,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க பொருளாளர் ராஷ்மி நன்றி கூறினார்.

